Wednesday, October 26, 2011

விமர்சனம் : ஏழாம் அறிவு



என் ஆறாம் அறிவு செய்த தவறால், ஏழாம் அறிவு படத்திற்கு டிக்கெட் மூன்று தினங்களுக்கு முன்பதிவு செய்தேன்....தீபாவளியன்று சரியான நேரத்திற்கு செல்ல வேண்டுமேயென்று, மினி வேனைப் பிடித்து, மிகச் சரியாக 6.58க்கு உள்ளே நுழைந்து, நல்ல சீட் கண்டுபிடித்து உட்கார்ந்தேன்..இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால், சரியான நேரத்திற்கு நான் சென்ற முக்கால்வாசி காரியம் நடந்ததில்லை...இதனால் காலந்தவறாமைக்கும் எனக்கும் காத தூரம்.....

சரி, கதைக்கு வருவோம்...முருகதாஸின் பேட்டியும், படத்தின் முன்னோட்டமும் பார்த்திருந்தால், எந்த ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகனும் சிந்திக்க கூடிய கதை...திரைக்கதைக்கு சற்று கஞ்சி போட வேண்டிய நிலைமை...முதல் பத்து நிமிடம், உண்மையிலேயே அருமை...வரலாற்று பிம்ப சூர்யா, கட்டாயம் பொன்னியின் செல்வனில் ஒரு முக்கிய பாத்திரத்தை பிடித்திருப்பார் மணிரத்தினம் தொடர்ந்தால். ஆனால் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு திருப்தியில்லை/பொருத்தமில்லை (கவனிக்க, மிகச் சிக்கனமான வசனத்திலேயே). சூர்யாவிடம் படிப்படியான முன்னேற்றத்தை நன்றாக காணமுடிகிறது (சிக்ஸ் பேக்-க சொல்லலீங்க..). ஒரு சில‌ உண‌ர்ச்சிவ‌ச‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌ம் பேசும் போது, விஜ‌ய‌காந்த‌ ஓவ‌ர்-டேக் ப‌ண்ற‌ வாய்ப்பு தெரியது...சூர்யா ஜாக்கிர‌தை...

சீனாவிலிருந்து வரும் ஒருவன், இவ்வளவு சர்வ சாதரணமாக சென்னையில், பல கொலைகளை நிகழ்த்த முடிகிறதென்றால், சாரி முருகதாஸ்...(அதுவும் ஒரு முழு போலீஸ் ஸ்டேஷனே காலி). நோக்கு வர்மத்தை கோக்கு மாக்காக உபயோக்கித்திருக்கிறார்...எதிராளியை மனோவசியம் செய்தால், அவனுக்கு தெரிந்த மொழியில் மட்டுமே கட்டளையிடமுடியும். அதற்குமே மினிமம் பல மணி நேரங்கள் ஆகும்... "டாங் லீ"க்கோ தமிழ் தெரியாது...மாகி நூடுல்ஸை-விட விரைவாக, அவர் செய்யும் மனோ வசியங்கள், பயங்கர காமெடி...நம்ப முடியவில்லை...இது போல் ப‌த்து "டாங் லீ" வ‌ந்தால், சென்னை ஒரு வார‌த்தில் காலி என்ப‌து போன்ற‌ பீதி தேவையில்லாத‌ பில்ட‌ப்.

என்ன‌தான் DNA சோத‌னையென்றாலும், திர‌வ‌ தொட்டிக்குள், ம‌ணிக்க‌ண‌க்காக‌ நிற்கும் கொடுமையை என்ன‌வென்று சொல்ல‌ (மூக்கிற்கு ஒரு மாஸ்க் போட‌ வேண்டாமா, ஆண்ட‌வா).த‌மிழீழ‌ தலைவ‌ன் கொலையை த‌ட்டிக் கேட்கும் வ‌ச‌ன‌த்திற்கு ஒரு த‌னி ச‌பாஷ் போட‌லாம்.

படத்தின் ஹைலைட்டாக, சென்னை ஐ.ஐ.டி யின் பரப்பளவு 640 ஏக்கர், அதில் முக்கால்வாசி காடு என்ற தகவல், யார் காதிற்கும் செல்லக்கூடாது...இல்லையேல் இன்னும் சில வருடங்களில், இங்குதான் ஐ.ஐ.டி இருந்தது என்று சொல்ல வேண்டியிருக்கும்....


இதுபோன்று இன்னும் இரு ப‌ட‌ங்க‌ள் எடுத்தால், உத‌யநிதி வெறும் "உத‌யா" ஆகிவிட‌ வேண்டிய‌துதான்.போதிதர்ம‌னை போதித்த‌ முருக‌தாஸ், திரைக்க‌தையை இன்னும் வ‌லுவாக்கியிருக்க‌லாம்.ஹாரிஸ் சார், சீனால்லாம் போய், க‌டைசியில‌ ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் மாதிரியே இருக்கே...போங்க‌ சார், நீங்க‌ளும் ஏமாத்திட்டீங்க‌...."டாங் லீ" மிக‌ச் சிற‌ப்பாக‌ ந‌டித்துள்ளார்....சாரி அடித்துள்ளார்....

கே.எஸ்.ர‌விக்குமார் மாதிரி முய‌ற்சியெல்லாம், திரைக்க‌தை வேக‌த்திலும், ஆடிய‌ன்ஸை க‌ட்டுக்குள் வைக்கும் வித்தையிலும் காட்டுங்க‌ சார். இதைத் த‌விர‌, என்னால் வேறெதையும் இப்போதைக்கு சொல்ல‌ முடியல‌, முருக‌தாஸ் "பெட்ட‌ர் ல‌க் நெக்ஸ்ட் டைம்".

விஜய் வாழ்த்து தெரிவித்த போதே நினைத்தேன்...Anyway வேலாயுதத்தோட வெற்றி கன்பார்ம்ட்....கன்கிராட்ஸ் விஜய்..

5 comments:

panchayathu said...

//மாகி நூடுல்ஸை-விட விரைவாக, அவர் செய்யும் மனோ வசியங்கள், பயங்கர காமெடி...நம்ப முடியவில்லை...//

ha..ha..
Haven't seen this movie yet..i will watch and reply my comments..

Venkat said...
This comment has been removed by the author.
Venkat said...

இப்படத்தின் இயக்குனரின் முந்தைய படங்களை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, இந்த படம் அவ்வளவு பாதிக்க கூடியதாக இல்லை என்பது உண்மை. அதற்கு திரைக்கதையும், அங்கங்கே இருக்கும் லாஜிக் ஓட்டைகளும் முக்கிய காரணம் என்பதும் உண்மை. ஆனால், இப்படத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்திருந்தால் ஒரு நல்ல படமாக வந்திருக்கும் என்ற ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கிறது. அதுவே, எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறேன். அதுவே உங்கள் விமர்சனத்திலும் தெரிகிறது.

என்னை பொருத்தமட்டில், இரண்டாம் பாதியில் காட்சிகளில் இருக்கும் அந்த விறுவிறுப்பு சரிவர எடுபடாமல் போனது, முதல் பாதியில் இருக்கும் காட்சிகளின் ஒழுங்கின்மையே என்று நினைக்கிறேன்.அந்த போதிதர்மரின் காட்சிகளை ஸ்ருதி சொல்வது போல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

உங்கள் விமர்சனத்தில் இருப்பதை எதயும் மறுக்க முடியவில்லை என்றாலும், படத்தின் மீது மிக பெரிய வெறுப்பு ஏற்படவில்லை.
அது, வேலாயுதம் பார்த்த பிறகு மிக உறுதியாகவே சொல்லமுடிகிறது.

panchayathu said...

"வேலாயுதம்" பார்த்துட்டு "7 ஆம் அறிவு" பார்த்தேன். அறிவுக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டார் விஜய்.

சிவா.. said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே....திரைக்கதையின் மிகப்பெரிய தொய்வு,
பல லாஜிக் மீறல்களால் 7ம் அறிவை நன்றாக ரசிக்க முடியவில்லை. "வேலாயுதம்" இந்த அளவு
எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. முருகதாஸும் கொஞ்சம் நிறையவே பேசிவிட்டார். மிக அருமையான‌
கதையை பாழடித்த‌தில் செல்வாவுடன் இணைந்து விட்டார். இந்த படம் இந்தி பதிப்பை நன்றாக எதிர்பார்க்கலாம்
என்று எண்ணுகிறேன். எதிர்பார்ப்புதானே ரசிகனின் சொத்து....