Sunday, September 18, 2016

கவிதை: என் வருத்தமெல்லாம் 

கருக்கலைப்பு
கள்ளிப்பால்
பள்ளிப் பருவத்து
எள்ளி நகையாடல்
விடலைப் பருவத்து
ஒரு தலைக் காதல்
கல்லூரி கால‌ கேலி கிண்டல்கள்
பேருந்து சீண்டல்கள்
இவையனைத்தும்
தடைகளில்லையென தப்பித்தால்
அரிவாள் வெட்டு
ஆசிட் வீச்சு
புனைவுப் படம்
இன்னும் எத்தனையோ
சிக்கி சின்னாபின்னமாகும்
எனக்கு
வேறு வேறு பெயர்கள்
வேறு வேறு ஊர்கள்
சுற்றமும் நட்புமிருந்து
சுற்றியும் மானிட கூட்டமிருந்து
அபயக்குரல் அறியாமலிருந்த
மாக்களுடன் வாழ்வதைவிட‌
மரித்துப் போவதே மேலெனினும்
உனக்கென் உயிர்பறிக்கும்
உரிமையை தந்தது யாரென‌
தெரியாமலே போவதென்
வருத்தமெல்லாம் !

No comments: