தமிழ்நாட்டு நடிகர்கள் (தமிழ் படத்தில் நடிப்பவர்கள் அனைவரும்...எதுக்கு பிரச்சினை???) தன் சந்தையில் மவுசு குறைந்தவுடன் அரசியலில் சேர்ந்து மைக் பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது. அப்படி மைக் பிடித்தவர்கள் எல்லாம் அரசியல்வாதியாகிவிட்டார்கள் போலும். சமீபகாலமாக காவிரி பிரச்சினை பற்றி நடிகர்கள் யாரும் கருத்து கூறவில்லை என்ற கருத்து பரவலாகிவிட்டது. அதாவது தன்னை எந்த கட்சியிலும் இனைத்து கொள்ளாத நடிகர்கள் மட்டுமே குறி (குறிவைப்பது ரஜினிக்கு மட்டுமே, ஆனால் சிலசமயம் வேறு சிலரும் சிக்கலாம்)...
நடிகர்கள் அரசியலுக்கு வருமுன், அவருக்கு என்ன தெரியும்? என்று சொல்ல வேண்டியது. நம்மை விட இவனுக்கு அதிகம் தெரிந்து விட்டால் என்ன என்ற பயமெல்லாம் இல்லை.சும்மா போட்டு வாங்கவே அந்த கேள்விகள் எல்லாம். அவர்களே எதுவும் வேண்டாமென்று ஒதுங்கியிருந்தாலும், நீ ஏன் வாயே திறக்க மாட்டேங்கிற? என்று குடைவது. இதன் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகிறது. நிருபர் கேள்வி கேட்க வருமுன் நாமே சிலவற்றை சொல்லிவிடுவது. பின் அது தானகவே பற்றிக் கொள்ளும்.
அரசியல்வாதிகளே! உங்களுக்கு முதுகெலும்பிருந்தால் முட்டி மோதி காவிரித் தண்ணீரை வாங்குங்கள். தலைவர்கள் முன்னின்று நடத்தும் போராட்டங்கள் குறைந்துவிட்டதே மிக முக்கியமான காரணமாக நான் நினைக்கிறேன். மிகச் சமீபமாக ராமதாஸ் களத்தில் குதித்து, ஏணியில் ஏறி ஆங்கிலம் மீது தார் பூசினார். அன்று முதல் அனைவரும் தமிழிலேயே எல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
எத்தனை வயதானாலும் முன்பிருந்த தலைவர்கள் முன்னின்று போராட்டத்தை நடத்தினார்கள். சரி, அன்று போல் இன்று இல்லை, தலைவர்களும் இல்லை. தனக்கு தேவையெனில் தொ(கு)ண்டனை ஏவிவிடும் அரசியலைவிட, நாட்டிற்காக தூண்டிவிடும் தலைவனே தற்போது தேவை!
இனியாவது நண்டு கதை (தெரியாதவர்கள் மின்னஞ்சல் அனுப்பலாம்) போலில்லாமல், ஸ்டாலினோ, அன்புமணியோ, விஜயகாந்தோ, திருமாவோ போராட்டக் களமிறங்கி பணி செய்ய வேண்டும்.
வருவாயா தலைவனே! வழி நடக்க இருக்கிறோம் இளைய தலைமுறை....
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
nadikara pathi padika virumbala
Post a Comment