தமிழ்நாட்டு கலாச்சாரம், பண்பாடு, நல்லொழுக்கம் மற்றும் வாழும் கலையை விளக்கும் விதமாக சமீப காலமாக சில தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பாகின்றது. அமெரிக்கா வந்தாலும் நமது தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் ஆவல் குறையாத காரணத்தால் (தப்புதாம்யா...) தெரியாத்தனமா விஜய் டி.வியை பதினைந்து டாலர் கொடுத்து வாங்கினாலும் வாங்கினேன்....பாதி நேரம் சர்வர் சரியா இருக்காது, அப்படியே இணைப்பு கிடைத்து வந்தாலும் வரும் விளம்பர கொடுமை தாங்க முடியல சாமி....வரி விளம்பரம் வந்தாலும் பரவாயில்ல...வரிக்கு வரி விஜய் டி.வி நிகழ்ச்சி விளம்பரம்....அதுல ஒரு முக்கியமான நிகழ்ச்சி வருது பாருங்க...அத சொல்லலேன்னா துக்கம் தொண்டைய அடைக்குது.
"ஜோடி நெம்பர் 1", சின்னத்திரை பிரபலங்கள் சிலரை உண்மையான ஜோடி, டுபான்ஸ் ஜோடி என பிரித்து, முதல் பரிசு பத்து லட்சத்திற்கு வண்ணமயமான குத்தாட்டம் போட்டு ஒளிபரப்பினர். போட்டி நிகழ்ச்சியின் நடுவே அதற்காக அவர்கள் மேற்கொண்ட பயிற்சிகளையும், சிரமங்களையும் அவர்களே கூறும், பார்ப்பவர் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும் துண்டு நிகழ்ச்சிகள் பலவும் ஒளிபரப்பினர். நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அவர்கள் வழங்கிய பலவற்றுள் முக்கியமானது, கெமிஸ்ட்ரி எனும் அருஞ்சொற்பொருள். என்னா விளக்கம்யா,..கலந்து கொண்டவர் முதல் பார்த்த அனைவரும் கெமிஸ்ட்ரியை நன்றாக புரிந்து கொண்டிருப்பர். இந்த கொடுமை போதாதென்று, பெரிய பூஜா தேர்வு செய்திருந்த "அப்படிப் போடு" பாடலுக்கு அவரால் ஆடமுடியாத வருத்ததை சொல்லி, திடீரென்று எழுந்து ஒரு ஆட்டம் போட்டார் பாருங்கள், ரெண்டு கண் போதாது அதைப் பார்க்க.
நிகழ்ச்சிக்கு பயங்கரமான வரவேற்பு போலும், இப்போது "ஜோடி நெம்பர் 1 சேலன்ஞ்" என்று வீட்டில் சும்மாயிருக்கும் பெரிய திரை பிரபலங்களை(???) வைத்து நிகழ்ச்சி பிரமாதமாக போய்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சித் தொடர் முடியும் முன் எப்படியாவது பார்த்து விடுங்கள்.....இதில் நடிகை சந்தோஷிக்கு (அதாங்க பாபா படத்துல மணீஷாவுக்கு தங்கச்சியா வந்திச்சே...) இழைக்கப் பட்ட அநீதிக்காக அவங்க அம்மா போரட்ட களத்துல குதிச்சு ஆதரவு தந்த பேட்டிய பார்த்து திகைச்சிட்டேன்...(ஸ்காலர்ஷிப் கிடைச்சும், அதை வாங்க வருமான சான்றிதழ் வாங்க தாலுக்கா அலுவலகத்துக்கு வரமறுத்த என் தந்தை ஞாபகத்திற்கு வந்தார்)....இந்த இரு நிகழ்ச்சிகளிலும், நடன ஒத்திகை பார்ப்பவர்கள் எப்படியெல்லாம் கெமிஸ்ட்ரியோடு ஒத்திகை பார்க்கிறார்கள் என்று மட்டும் தான் காட்டினார்கள்..ஆனால் மமதி நடத்தும் "ஜில்லுனு ஒரு ஜோடி" நிகழ்ச்சி பார்த்தீங்கன்னா, இது வெறும் சாதரணமாயிடும். போட்டிக்கு வருகின்ற ஜோடியிடம் அவர் கேட்கும் கீழ்கண்ட கேள்விகள்:
"முதன் முதலில் முத்தம் கொடுத்த போது உங்கள் உணர்ச்சிகள் எப்படி இருந்தது?"
"உங்களுக்கு ரொமான்ஸ் வரும் இடம் எது?"
இதைப் போன்று மயிர் கூச்செரியும் கேள்விகளுக்கு பதில் அளித்து முடித்தவுடன், ஒரு பரிசு டிக்கெட்டை இடது கையால் அவரே வழங்குவார்..
மயிர் கூச்செரியும் இந்த மாதிரி நிகழ்ச்சிகளால் இனி தமிழ்நாட்டு தம்பதிகள் எல்லோரும் நடனத்தில நல்ல தேர்ச்சி பெற்றுவிடுவர்.
இந்த நிகழ்ச்சிக்கு குத்தாட்டத்தை தேர்ந்தெடுத்ததாலோ என்னவோ பெருவாரியான வரவேற்பு. இதையெல்லாம் பார்த்து சன் டி.வி சும்மாயிருக்குமா என்ன, இதையெல்லாம் தாண்டி "திருவாளர் திருமதி" என்று நிகழ்ச்சி ஆரம்பித்து கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் யார் அடுத்தவர் மீது அதிகமாக காறி துப்புகிறார்கள் என்று பார்த்து பரிசும் கொடுக்கிறது. கலந்து கொண்டு நடனமாடுகிறவர்களை பார்க்கும் போது பரிதாமே மேலிடுகிறது.
24 மணி நேரத்துக்கு நிகழ்ச்சி கொடுக்க முடியாத ஆற்றாமையே இந்த பயமுறுத்தும் தொப்புள் நடன நிகழ்ச்சிகளுக்கு காரணமென நினைக்கிறேன்.
பாவம் ராமதாஸும், திருமாவும் காவிரி பிரச்சினையில் களப்பணி ஆற்றுவதால் இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை போலும்...ஆ..மறந்துட்டேனே சன் டி.வியிலும் நிகழ்ச்சி வர ஆரம்பிச்சுட்டுதே இனிமே அவுங்க என்ன செய்ய முடியும்.....
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
திரு.சிவா,நீஙகள் சொன்னவற்றை நாணும பார்த்தேன்.கொடுமையாக
இருக்கிறது.அதுவும "திருவாளர் திருமதி" தாங்க முடியலடா சாமி.
நீஙகள் எழதியது நன்றாக இருக்கிறது.உங்களிடம ஒரு chemistry
இருக்கு சாரே !
Post a Comment