Sunday, September 18, 2016

கவிதை: என் வருத்தமெல்லாம் 

கருக்கலைப்பு
கள்ளிப்பால்
பள்ளிப் பருவத்து
எள்ளி நகையாடல்
விடலைப் பருவத்து
ஒரு தலைக் காதல்
கல்லூரி கால‌ கேலி கிண்டல்கள்
பேருந்து சீண்டல்கள்
இவையனைத்தும்
தடைகளில்லையென தப்பித்தால்
அரிவாள் வெட்டு
ஆசிட் வீச்சு
புனைவுப் படம்
இன்னும் எத்தனையோ
சிக்கி சின்னாபின்னமாகும்
எனக்கு
வேறு வேறு பெயர்கள்
வேறு வேறு ஊர்கள்
சுற்றமும் நட்புமிருந்து
சுற்றியும் மானிட கூட்டமிருந்து
அபயக்குரல் அறியாமலிருந்த
மாக்களுடன் வாழ்வதைவிட‌
மரித்துப் போவதே மேலெனினும்
உனக்கென் உயிர்பறிக்கும்
உரிமையை தந்தது யாரென‌
தெரியாமலே போவதென்
வருத்தமெல்லாம் !

Wednesday, October 26, 2011

விமர்சனம் : ஏழாம் அறிவு



என் ஆறாம் அறிவு செய்த தவறால், ஏழாம் அறிவு படத்திற்கு டிக்கெட் மூன்று தினங்களுக்கு முன்பதிவு செய்தேன்....தீபாவளியன்று சரியான நேரத்திற்கு செல்ல வேண்டுமேயென்று, மினி வேனைப் பிடித்து, மிகச் சரியாக 6.58க்கு உள்ளே நுழைந்து, நல்ல சீட் கண்டுபிடித்து உட்கார்ந்தேன்..இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால், சரியான நேரத்திற்கு நான் சென்ற முக்கால்வாசி காரியம் நடந்ததில்லை...இதனால் காலந்தவறாமைக்கும் எனக்கும் காத தூரம்.....

சரி, கதைக்கு வருவோம்...முருகதாஸின் பேட்டியும், படத்தின் முன்னோட்டமும் பார்த்திருந்தால், எந்த ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகனும் சிந்திக்க கூடிய கதை...திரைக்கதைக்கு சற்று கஞ்சி போட வேண்டிய நிலைமை...முதல் பத்து நிமிடம், உண்மையிலேயே அருமை...வரலாற்று பிம்ப சூர்யா, கட்டாயம் பொன்னியின் செல்வனில் ஒரு முக்கிய பாத்திரத்தை பிடித்திருப்பார் மணிரத்தினம் தொடர்ந்தால். ஆனால் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு திருப்தியில்லை/பொருத்தமில்லை (கவனிக்க, மிகச் சிக்கனமான வசனத்திலேயே). சூர்யாவிடம் படிப்படியான முன்னேற்றத்தை நன்றாக காணமுடிகிறது (சிக்ஸ் பேக்-க சொல்லலீங்க..). ஒரு சில‌ உண‌ர்ச்சிவ‌ச‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌ம் பேசும் போது, விஜ‌ய‌காந்த‌ ஓவ‌ர்-டேக் ப‌ண்ற‌ வாய்ப்பு தெரியது...சூர்யா ஜாக்கிர‌தை...

சீனாவிலிருந்து வரும் ஒருவன், இவ்வளவு சர்வ சாதரணமாக சென்னையில், பல கொலைகளை நிகழ்த்த முடிகிறதென்றால், சாரி முருகதாஸ்...(அதுவும் ஒரு முழு போலீஸ் ஸ்டேஷனே காலி). நோக்கு வர்மத்தை கோக்கு மாக்காக உபயோக்கித்திருக்கிறார்...எதிராளியை மனோவசியம் செய்தால், அவனுக்கு தெரிந்த மொழியில் மட்டுமே கட்டளையிடமுடியும். அதற்குமே மினிமம் பல மணி நேரங்கள் ஆகும்... "டாங் லீ"க்கோ தமிழ் தெரியாது...மாகி நூடுல்ஸை-விட விரைவாக, அவர் செய்யும் மனோ வசியங்கள், பயங்கர காமெடி...நம்ப முடியவில்லை...இது போல் ப‌த்து "டாங் லீ" வ‌ந்தால், சென்னை ஒரு வார‌த்தில் காலி என்ப‌து போன்ற‌ பீதி தேவையில்லாத‌ பில்ட‌ப்.

என்ன‌தான் DNA சோத‌னையென்றாலும், திர‌வ‌ தொட்டிக்குள், ம‌ணிக்க‌ண‌க்காக‌ நிற்கும் கொடுமையை என்ன‌வென்று சொல்ல‌ (மூக்கிற்கு ஒரு மாஸ்க் போட‌ வேண்டாமா, ஆண்ட‌வா).த‌மிழீழ‌ தலைவ‌ன் கொலையை த‌ட்டிக் கேட்கும் வ‌ச‌ன‌த்திற்கு ஒரு த‌னி ச‌பாஷ் போட‌லாம்.

படத்தின் ஹைலைட்டாக, சென்னை ஐ.ஐ.டி யின் பரப்பளவு 640 ஏக்கர், அதில் முக்கால்வாசி காடு என்ற தகவல், யார் காதிற்கும் செல்லக்கூடாது...இல்லையேல் இன்னும் சில வருடங்களில், இங்குதான் ஐ.ஐ.டி இருந்தது என்று சொல்ல வேண்டியிருக்கும்....


இதுபோன்று இன்னும் இரு ப‌ட‌ங்க‌ள் எடுத்தால், உத‌யநிதி வெறும் "உத‌யா" ஆகிவிட‌ வேண்டிய‌துதான்.போதிதர்ம‌னை போதித்த‌ முருக‌தாஸ், திரைக்க‌தையை இன்னும் வ‌லுவாக்கியிருக்க‌லாம்.ஹாரிஸ் சார், சீனால்லாம் போய், க‌டைசியில‌ ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் மாதிரியே இருக்கே...போங்க‌ சார், நீங்க‌ளும் ஏமாத்திட்டீங்க‌...."டாங் லீ" மிக‌ச் சிற‌ப்பாக‌ ந‌டித்துள்ளார்....சாரி அடித்துள்ளார்....

கே.எஸ்.ர‌விக்குமார் மாதிரி முய‌ற்சியெல்லாம், திரைக்க‌தை வேக‌த்திலும், ஆடிய‌ன்ஸை க‌ட்டுக்குள் வைக்கும் வித்தையிலும் காட்டுங்க‌ சார். இதைத் த‌விர‌, என்னால் வேறெதையும் இப்போதைக்கு சொல்ல‌ முடியல‌, முருக‌தாஸ் "பெட்ட‌ர் ல‌க் நெக்ஸ்ட் டைம்".

விஜய் வாழ்த்து தெரிவித்த போதே நினைத்தேன்...Anyway வேலாயுதத்தோட வெற்றி கன்பார்ம்ட்....கன்கிராட்ஸ் விஜய்..

Thursday, June 10, 2010

விருமாண்டி :

தற்செயலாக "நம்மவரின்" இந்த கலாச்சார காவல் பேட்டியை கண்டேன். ரசித்தேன். ஒரு படைப்பாளி, எவ்வளவு தூரம் சமுதாய தூசுகளினால் மாசுபடுகிறான் என்பதை இதற்கு மேலும் நாகரீகமாக சொல்ல முடியுமா???

http://www.youtube.com/watch?v=C5uHxcSga5U&feature=related

Monday, March 01, 2010

இலக்கணம் : காரணப் பெயர்

சிங்கமுத்து

நன்றி : தமிழ்சினிமா.காம்

Tuesday, February 16, 2010

விமர்சனம் : ஆயிரத்தில் ஒருவன் ‍‍ ‍- II

அப்பாடி, இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு தொடரலாம் என்றெண்ணி வேலைப் பளுவால், இன்று தொடங்குகிறேன். இதற்குள் ஆ.ஒ. வனைப் பற்றி வந்த விமர்சனத்தையெல்லாம் படித்தேன். ஒரு சிலர் உயிர்மையில் ஆகா...ஓகோ...வென புகழ்ந்துரைத்துள்ளனர். செல்வாவே இதையெல்லாம் திங்க் பண்ணியிருப்பாருன்னு ஒரு டவுட்..

ஒருமுறை பழைய 80x86 பி.சி.யில் ஒரு ஸ்க்ரீன் சேவரை நண்பர் ஒருவர் பார்த்துவிட்டு "இது என்ன ப்ரெளனியின் இயக்க அடிப்படையில் வேலை செய்கிறதா?" என்று கேட்டார். நானும் இது எங்கோயோ கேட்ட பெயராக இருக்கிறதே என்று குழம்பிக் கொண்டிருக்கையில் அவரே அந்த வேதியியல் அறிஞரின் கண்டுபிடிப்பை சொன்னார். நானும் கொஞ்சம் புத்திசாலித்தனத்தை காட்ட நினைத்து, "அதெல்லாம் இல்லீங்க, இது ஒரு சின்ன கணக்கு தான்" என்று விளக்கினேன். விஷயம் ஒன்றுதான் என்றாலும் பார்ப்பவரின் ஞானத்தை பொறுத்து அது மாறுகிறது என்ற தத்துவம் மீண்டும் ஒருமுறை அந்த உயிர்மை விமர்சனங்களை படித்தபோது புரிந்தது.

ஆ.ஒ. வனும் அப்படித்தான், என்னைப் பொறுத்தவரையில், ஹீரோ, ஹீரோயின்ஸ் எல்லாமே செல்வாவின் பழைய பட வாசனைதான். சில டயலாகெல்லாம் மாறவேயில்லை. நிறைய‌ ஆங்கில‌ப் ப‌ட‌ வாச‌னை. க‌டைசி அரை ம‌ணிநெர‌ டார்ச்ச‌ர் தாங்க‌ முடிய‌வில்லை.ம‌ன்ன‌ரை ம‌திக்கும் ம‌க்க‌ளைத் த‌விர‌ ம‌ற்ற‌து எதுவுமே ம‌ன‌தில் ஒட்ட‌வில்லை.

ம‌க்க‌ள் அனைவ‌ரையும் சாக‌விட்டு, ம‌ன்ன‌ரின் ம‌க‌னை ம‌ட்டும் காப்ப‌ற்ற‌ "ஆயிர‌த்தில் ஒருவ‌ன்" எத‌ற்கு? ஆயிர‌த்தில் ஒருத்தி என்று வைத்திருந்தால் ப‌ட‌த்தின் பெய‌ராவ‌து காப்ப‌ற்ற‌ப் ப‌ட்டிருக்கும்.

ஆனாலும், சில பல காரணங்களால் இளைஞர்கள் ஒருமுறை பார்க்கலாம். மற்ற அனைவருக்கும் ட்ரைலர் மட்டுமே போதும்.

பின் குறிப்பு : இந்த‌ வார‌ம் "அவ‌தார்" பார்த்தேன். வ‌ழ‌க்க‌மானா ஹாலிவுட் ஏலிய‌ன்ஸை வித்தியாச‌மான‌ க‌ற்ப‌னை வ‌ள‌த்தால் அச‌த்தியிருக்கிறார். பார்ப‌த‌ற்கு வில‌ங்குக‌ள் போலிருக்கும் மனித‌ர்க‌ள் இற‌ப்ப‌தையே ந‌ம்மால் தாங்க‌ முடியாத‌ அள‌வு சொல்லியிருக்கிறார். ஆனால் கூட்ட‌ம் கூட்ட‌மாக‌ த‌மிழ‌ர்க‌ள் இற‌க்கும் காட்சி அதீத‌ வெறுப்பை வ‌ழ‌ங்குகிற‌து ஆ.ஒருவ‌னில். இதுதான் வித்தியாச‌ம்.

Tuesday, January 19, 2010

விமர்சனம் : ஆயிரத்தில் ஒருவன்

நீ....ண்....ட...நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தை நேற்று முன் தினம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. சும்மா சொல்லக்கூடாது "ஓப்பனிங் எல்லாம் டைட்டானிக் ரேஞ்ச் தான்". கதை இதுவரை தமிழ் சினிமா பார்த்திராரது என்றார்கள், உண்மைதான். கி.பி. 14 ஆம் நூற்றான்டில், பாண்டிய மன்னன் படையெடுப்பினால் பாதிக்கப் பட்ட சோழ மன்னன், பாண்டிய மன்னனின் குலதெய்வ சிலையை களவாடிச் செல்கிறான் ( எப்போதுமே போரில் வென்றவர் மட்டுமே களவாடுவர். ஆனால் இதில் உல்டா). களவாடிய சிலையுடன் தன் மகனையும் ஒரு தீவிற்கு அனுப்பிவைத்து, பாதுகாப்புக்கு ஏழு அரண்களையும் அமைக்கிறான். இதை கண்டுபிடிக்க செல்பவர் யாருமே உயிருடன் திரும்புவதில்லை. கடைசியாக சென்ற தொல்பொருள் ஆய்வாளரும் என்ன ஆனார் என்று தெரியாததால், அமைச்சர் உதவியுடன் யுவதிகள் ரீமாசென், ஆன்(ண்?)டிரியா, கார்த்தி மற்றும் குழுவினரின் பயணம் தொடர்கிறது. உண்மையில் இது ஆயிரத்தில் ஒருத்திதான்....ஆனால் ஹீரோயிசம் கருதி ஆயிரத்தில் ஒருவன் என வைத்துவிட்டார் செல்வா.

தொடரும் (செல்வா மட்டும்தான் மூணு வருஷம் படமெடுப்பாரா?)

Sunday, May 24, 2009

சிந்திக்க : இலங்கைத் தமிழர்கள் ???


நான் பிறப்பதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கி, இன்றும்
முற்றுப் பெறாமல் இருக்கும் இந்த பிரச்சினை சமீப காலமாக என் 
சிந்தனையில் தங்கி இம்சிக்கிறது. கற்பனை செய்தாலும் காண 
முடியாத ஒரு வாழ்வை ஒரு சமூகம் என் சமகாலத்தில் வாழ்வது 
தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கிறது.

ஈராக் தாக்கப் பட்டபோதும், இஸ்ரேல் தாக்கிய செய்தியும் பாதிப்பு 
தந்தாலும், இந்த இலங்கை பிரச்சினையில் அரசியல் செய்யும் 
இந்திய/சீன/பாகிஸ்தானிய அரசியல்வாதிகளால் பொதுமக்களில்
ஒருவனான நான் அடையும் துன்பத்திற்கு அளவே இல்லை. 
உலகில் எங்கோ மனித குலத்திற்கு நடந்த கொடுமைக்கு, நடு 
இரவில் உறங்காமல் வாடினானாம் பாரதி! அதுபோல் வெம்பவும், 
வாடவும் மட்டுமே முடியும் போல் உள்ளது.

இந்த பிரசினையில் நல்ல தெளிவும், தீர்க்கமான பார்வையும் 
பெற்றிருந்த முத்துகுமார் தற்கொலை செய்து கொண்டது மிகப் 
பெரிய தவறு. அவருக்கு அரசின் ஆதரவும் மிகப் பெரிய விளம்பரமும் 
கிடைக்காதேனென இக்கடிதத்தை http://nakkheeran.in/users/frmNews
.aspx?N=2654 படித்த பிறகு தெளிவாகியது.

தற்கொலையோ கொலையோ எந்தப் பிரச்சினைக்கும் முழுமையான 
தீர்வைத் தராதென தீர்க்கமாக நம்பும் நான் முத்துக்குமாரின் இந்த 
செயலை ஆதரிக்க முடியவில்லை. நல்ல சிந்தையெல்லாம் நாம் 
தீயிடம் அடகு வைத்தால் முன்னேறப் போவது மூர்க்கமான 
சமூகம்தானே?  

எது நடந்தாலும் வாழ்க்கை நகர வேண்டும் (Life must go on) என்ற 
தத்துவத்தை தாங்கிப் பிடிக்கும் நான்,  இந்த பிரச்சினை வருங்கால 
சந்ததிகளை வரவேற்க வேண்டாமென பிரார்த்திக்கிறேன்.