Sunday, May 24, 2009

சிந்திக்க : இலங்கைத் தமிழர்கள் ???


நான் பிறப்பதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கி, இன்றும்
முற்றுப் பெறாமல் இருக்கும் இந்த பிரச்சினை சமீப காலமாக என் 
சிந்தனையில் தங்கி இம்சிக்கிறது. கற்பனை செய்தாலும் காண 
முடியாத ஒரு வாழ்வை ஒரு சமூகம் என் சமகாலத்தில் வாழ்வது 
தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கிறது.

ஈராக் தாக்கப் பட்டபோதும், இஸ்ரேல் தாக்கிய செய்தியும் பாதிப்பு 
தந்தாலும், இந்த இலங்கை பிரச்சினையில் அரசியல் செய்யும் 
இந்திய/சீன/பாகிஸ்தானிய அரசியல்வாதிகளால் பொதுமக்களில்
ஒருவனான நான் அடையும் துன்பத்திற்கு அளவே இல்லை. 
உலகில் எங்கோ மனித குலத்திற்கு நடந்த கொடுமைக்கு, நடு 
இரவில் உறங்காமல் வாடினானாம் பாரதி! அதுபோல் வெம்பவும், 
வாடவும் மட்டுமே முடியும் போல் உள்ளது.

இந்த பிரசினையில் நல்ல தெளிவும், தீர்க்கமான பார்வையும் 
பெற்றிருந்த முத்துகுமார் தற்கொலை செய்து கொண்டது மிகப் 
பெரிய தவறு. அவருக்கு அரசின் ஆதரவும் மிகப் பெரிய விளம்பரமும் 
கிடைக்காதேனென இக்கடிதத்தை http://nakkheeran.in/users/frmNews
.aspx?N=2654 படித்த பிறகு தெளிவாகியது.

தற்கொலையோ கொலையோ எந்தப் பிரச்சினைக்கும் முழுமையான 
தீர்வைத் தராதென தீர்க்கமாக நம்பும் நான் முத்துக்குமாரின் இந்த 
செயலை ஆதரிக்க முடியவில்லை. நல்ல சிந்தையெல்லாம் நாம் 
தீயிடம் அடகு வைத்தால் முன்னேறப் போவது மூர்க்கமான 
சமூகம்தானே?  

எது நடந்தாலும் வாழ்க்கை நகர வேண்டும் (Life must go on) என்ற 
தத்துவத்தை தாங்கிப் பிடிக்கும் நான்,  இந்த பிரச்சினை வருங்கால 
சந்ததிகளை வரவேற்க வேண்டாமென பிரார்த்திக்கிறேன்.

1 comment:

Unknown said...

enn manathai ranapdithiya natkas ninavuku vara vathuvitai