அப்பாடி, இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு தொடரலாம் என்றெண்ணி வேலைப் பளுவால், இன்று தொடங்குகிறேன். இதற்குள் ஆ.ஒ. வனைப் பற்றி வந்த விமர்சனத்தையெல்லாம் படித்தேன். ஒரு சிலர் உயிர்மையில் ஆகா...ஓகோ...வென புகழ்ந்துரைத்துள்ளனர். செல்வாவே இதையெல்லாம் திங்க் பண்ணியிருப்பாருன்னு ஒரு டவுட்..
ஒருமுறை பழைய 80x86 பி.சி.யில் ஒரு ஸ்க்ரீன் சேவரை நண்பர் ஒருவர் பார்த்துவிட்டு "இது என்ன ப்ரெளனியின் இயக்க அடிப்படையில் வேலை செய்கிறதா?" என்று கேட்டார். நானும் இது எங்கோயோ கேட்ட பெயராக இருக்கிறதே என்று குழம்பிக் கொண்டிருக்கையில் அவரே அந்த வேதியியல் அறிஞரின் கண்டுபிடிப்பை சொன்னார். நானும் கொஞ்சம் புத்திசாலித்தனத்தை காட்ட நினைத்து, "அதெல்லாம் இல்லீங்க, இது ஒரு சின்ன கணக்கு தான்" என்று விளக்கினேன். விஷயம் ஒன்றுதான் என்றாலும் பார்ப்பவரின் ஞானத்தை பொறுத்து அது மாறுகிறது என்ற தத்துவம் மீண்டும் ஒருமுறை அந்த உயிர்மை விமர்சனங்களை படித்தபோது புரிந்தது.
ஆ.ஒ. வனும் அப்படித்தான், என்னைப் பொறுத்தவரையில், ஹீரோ, ஹீரோயின்ஸ் எல்லாமே செல்வாவின் பழைய பட வாசனைதான். சில டயலாகெல்லாம் மாறவேயில்லை. நிறைய ஆங்கிலப் பட வாசனை. கடைசி அரை மணிநெர டார்ச்சர் தாங்க முடியவில்லை.மன்னரை மதிக்கும் மக்களைத் தவிர மற்றது எதுவுமே மனதில் ஒட்டவில்லை.
மக்கள் அனைவரையும் சாகவிட்டு, மன்னரின் மகனை மட்டும் காப்பற்ற "ஆயிரத்தில் ஒருவன்" எதற்கு? ஆயிரத்தில் ஒருத்தி என்று வைத்திருந்தால் படத்தின் பெயராவது காப்பற்றப் பட்டிருக்கும்.
ஆனாலும், சில பல காரணங்களால் இளைஞர்கள் ஒருமுறை பார்க்கலாம். மற்ற அனைவருக்கும் ட்ரைலர் மட்டுமே போதும்.
பின் குறிப்பு : இந்த வாரம் "அவதார்" பார்த்தேன். வழக்கமானா ஹாலிவுட் ஏலியன்ஸை வித்தியாசமான கற்பனை வளத்தால் அசத்தியிருக்கிறார். பார்பதற்கு விலங்குகள் போலிருக்கும் மனிதர்கள் இறப்பதையே நம்மால் தாங்க முடியாத அளவு சொல்லியிருக்கிறார். ஆனால் கூட்டம் கூட்டமாக தமிழர்கள் இறக்கும் காட்சி அதீத வெறுப்பை வழங்குகிறது ஆ.ஒருவனில். இதுதான் வித்தியாசம்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இப்படத்திருக்கு கலவையான விமர்சனம் கிடைத்திருக்கிறது. நன்றாக விமர்சனம் செய்யும் பொழுது, இது அந்த இயக்குநர் செல்வாக்கே தெரியாது என்று சொல்வது சற்றே மிகையானது. ஒரு சிறந்த படைப்பு என்பது மற்றவர்களை வேறு கோணத்தில் சிந்திக்க வைக்க தூண்ட வேண்டும். இராமாயாணமும், மஹாபாரதமும் இதை தான் செய்தது. இப்படமும் அதன் அளவில் இதை செய்கிறது. உதாரணம், படம் பார்த்த பிறகு, எனக்கு தோன்றியது இதுவே "நிகழ் காலத்தில் சஞ்சரித்த ஒருவன், கடந்த காலத்தில் இணைந்து, நிகழ் காலத்தை எதிர்க்கிறான்." இதற்கு காரணம் செல்வாவின் படம். எனக்கு தோன்றியதை அறிவியல் பூர்வாமாக படம் எடுக்க முடியம். ஆனால் இதனை வரலார்று வழி சொல்லியது பாரத்டத்தக்கது.
ஆயிரத்தில் ஒருவன் ஒரு பகல் நேர கனவில் வரும் கதை போன்றது. நமக்கு தோன்றியதை பிறர் நம்பும்படி சொல்லவேண்டும். இதில் நாம் நம்புவதற்கு, நமக்கு தெரிந்த சோழ அரசனை உபயோகபடுத்தியிருக்கிறார்.
இது போன்ற படங்களில் எப்படி எடுத்திருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். அதை விடுத்து வரலாற்றை கெடுத்துவிட்டார், தமிழர்களை கேவல படுத்தியிருக்கிறார் என்று விமர்சிப்பது மிகையான விமர்சனம்.
இப்படத்தில் ஆயிரத்தில் ஒருவன் என்பது கார்த்தியோ அல்லது ரீமாவோ இல்லை. அது சோழ ராஜியத்தில் மிஞ்சும் பார்த்திபணின் மகன். இப்படத்தின் சாரம் அதுதான் என்றாலும் இதை அனைவருக்கும் புரியும் வகையில் பதிவு செய்யவில்லை.
நீங்கள் சொன்ன அதே "அவதார்" படத்தின் இறுதி காட்சியில், படத்தின் கதாநாயகன் உயிர் பிழைப்பான என்ற இறுக்கமான சூழலில் கேமரா, கதாநாயகனின் முகத்தருகே இருக்கும். அவன் பிழைத்தவுடன், கேமரா அவன் கண்ணுக்குள் ஊடுருவி திரையில் "அவதார்" என தோன்றும் போது அனைவருக்கும் மிக எளிதாக புரிந்தது படத்தின் தலைப்பு.
தான் சொல்ல நினைத்ததை, சொல்லும் விதத்தில் (திரைக்கதை) சில சருக்கல்கள் இருந்தன என்றாலும், இப்படத்தின் நேர்த்தியில் ஒரு குறையும் சொல்ல முடியாது. இதுவரை தமிழ் படங்களில் பார்க்காத ஒன்று.
சமீபத்தில் சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகம் படித்தேன். சுஜாதா கூறியத போல் ஒரு காட்சியை எழுதும் போதும் விட, அதை படம் எடுக்கும் போது உள்ள வசதியை
இப்படத்தின் ஆரம்ப காட்சிகள் நகரும் விதம் உணர்த்துகிறது.அருமை.
பார்க்காத ஒரு ஆங்கில படத்தை அல்லது அதன் காட்சிகளை தமிழில் எடுத்து பெயர் வாங்கும் இயக்குணரை விட, செல்வா இப்படாதிர்க்கு தேவயாணதை எடுத்து சிறப்பாக சொல்லியுள்ளார்.
பின்னணி இசை படத்துடன் தேவாயான இடங்களில் சரியாக எடுத்துரைக்காமல் போனது.
இது தமிழில் ஒரு சிறந்த அறிவு சார்ந்த கற்பனை படமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதனை ஒரு சில விசயங்களில் தவறாவிட்தது இப்படம்.
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. உண்மையிலேயே இந்த கதை தமிழ் சினிமா முயற்சியில் ஒரு முன்னோடி என்பதில் சந்தேகமில்லை. "ஆயிரத்தில் ஒருவன்" பட தலைப்பு "பார்த்திபனின் மகன்" என்பதை படம் பார்த்தவுடனேயே ஒரு அன்பர் சொன்னார். ஆனாலும் "ஆயிரத்தில் (ஒரு) சிறுவன்" என்றல்லவா வைத்திருக்க வேண்டும்? சரி அதை விடுத்து, மற்றதை பார்த்தாலும் ஆயிரம் முரண்பாடுகள் சோழர்கள் வாழ்வில். அவர்களை காட்டிய விதம், ரீமாசென்னின் காரணமில்லா மாயாஜாலம், செல்வா படங்களில் வரும் சைக்கோ ஹீரோவின் நடனம், பெண்களை எள்ளி நகையாடல் எல்லாமே இந்த படத்திலும் உண்டு. கதைக்கு தேவைப்பட்டால், இதையெல்லாம் காண நானும் தயார்.
"குடவோலை" முறையை கொணர்ந்த சோழர்கள், காட்டுமிராண்டிகள் அல்லர். ஆனாலும் காட்டில் தனித்து விடப்பட்டால், எந்த ஒரு நாகரீகமான கூட்டத்திற்கும் இக்கதி நேரும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் தான் இதையெல்லாம் நான் குறிப்பிடவில்லை.
பலரும் குறிப்பிட்டதைப் போல, பிண்ணனி இசை ஒன்றும் மோசமில்லை.
மொத்தத்தில் செல்வா, ஒரு புதிய பாதைக்கு வித்திட்டிருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
//முரண்பாடுகள் சோழர்கள் வாழ்வில். அவர்களை காட்டிய விதம் //
என் மர்றொரு நண்பனும் இதை சொன்னார். இது சோழ ராஜாவின் உண்மை கதை அல்ல. ஒரு கற்பனை கதை. சோழ ராஜா இப்படி தான் இருந்தார் என்பதற்கான உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை. சிவாஜியும், கல்கியும் அறிமுகப்படுத்திய ராஜாவை தேடுகிறோம்.
//மொத்தத்தில் செல்வா, ஒரு புதிய பாதைக்கு வித்திட்டிருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை//
நன்றி.
Post a Comment