அப்பாடி, இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு தொடரலாம் என்றெண்ணி வேலைப் பளுவால், இன்று தொடங்குகிறேன். இதற்குள் ஆ.ஒ. வனைப் பற்றி வந்த விமர்சனத்தையெல்லாம் படித்தேன். ஒரு சிலர் உயிர்மையில் ஆகா...ஓகோ...வென புகழ்ந்துரைத்துள்ளனர். செல்வாவே இதையெல்லாம் திங்க் பண்ணியிருப்பாருன்னு ஒரு டவுட்..
ஒருமுறை பழைய 80x86 பி.சி.யில் ஒரு ஸ்க்ரீன் சேவரை நண்பர் ஒருவர் பார்த்துவிட்டு "இது என்ன ப்ரெளனியின் இயக்க அடிப்படையில் வேலை செய்கிறதா?" என்று கேட்டார். நானும் இது எங்கோயோ கேட்ட பெயராக இருக்கிறதே என்று குழம்பிக் கொண்டிருக்கையில் அவரே அந்த வேதியியல் அறிஞரின் கண்டுபிடிப்பை சொன்னார். நானும் கொஞ்சம் புத்திசாலித்தனத்தை காட்ட நினைத்து, "அதெல்லாம் இல்லீங்க, இது ஒரு சின்ன கணக்கு தான்" என்று விளக்கினேன். விஷயம் ஒன்றுதான் என்றாலும் பார்ப்பவரின் ஞானத்தை பொறுத்து அது மாறுகிறது என்ற தத்துவம் மீண்டும் ஒருமுறை அந்த உயிர்மை விமர்சனங்களை படித்தபோது புரிந்தது.
ஆ.ஒ. வனும் அப்படித்தான், என்னைப் பொறுத்தவரையில், ஹீரோ, ஹீரோயின்ஸ் எல்லாமே செல்வாவின் பழைய பட வாசனைதான். சில டயலாகெல்லாம் மாறவேயில்லை. நிறைய ஆங்கிலப் பட வாசனை. கடைசி அரை மணிநெர டார்ச்சர் தாங்க முடியவில்லை.மன்னரை மதிக்கும் மக்களைத் தவிர மற்றது எதுவுமே மனதில் ஒட்டவில்லை.
மக்கள் அனைவரையும் சாகவிட்டு, மன்னரின் மகனை மட்டும் காப்பற்ற "ஆயிரத்தில் ஒருவன்" எதற்கு? ஆயிரத்தில் ஒருத்தி என்று வைத்திருந்தால் படத்தின் பெயராவது காப்பற்றப் பட்டிருக்கும்.
ஆனாலும், சில பல காரணங்களால் இளைஞர்கள் ஒருமுறை பார்க்கலாம். மற்ற அனைவருக்கும் ட்ரைலர் மட்டுமே போதும்.
பின் குறிப்பு : இந்த வாரம் "அவதார்" பார்த்தேன். வழக்கமானா ஹாலிவுட் ஏலியன்ஸை வித்தியாசமான கற்பனை வளத்தால் அசத்தியிருக்கிறார். பார்பதற்கு விலங்குகள் போலிருக்கும் மனிதர்கள் இறப்பதையே நம்மால் தாங்க முடியாத அளவு சொல்லியிருக்கிறார். ஆனால் கூட்டம் கூட்டமாக தமிழர்கள் இறக்கும் காட்சி அதீத வெறுப்பை வழங்குகிறது ஆ.ஒருவனில். இதுதான் வித்தியாசம்.
Tuesday, February 16, 2010
Subscribe to:
Posts (Atom)